சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பட ரிலீஸுக்கு முன்னர் மிக பெரிய அளவில் படக்குழுவினர் படம் பற்றி பேசி பில்டப் கொடுத்திருந்தனர்.
இதனால் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் படுதோல்வி படமானது. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெரும் நஷ்டத்துக்கு ஆளானார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட சூர்யா ஞானவேல் ராஜாவுக்காக மீண்டும் இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். அதில் ஒரு படம் அடுத்த ஆண்டில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.