எஸ் ஜே சூர்யாவுடன் மோதும் கார்த்தி… சர்தார் 2 படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி…!

vinoth

புதன், 19 பிப்ரவரி 2025 (09:54 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு அதில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் எஸ் ஜே சூர்யா பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. சீனா எல்லையில் கார்த்தியும் எஸ் ஜே சூர்யாவும் மோதும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்