கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸான வெற்றியைப் பெற்றது.
இதற்கிடையில் சூர்யா நடிக்க இருந்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் சூர்யா தன்னுடைய 46 ஆவது படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார். நேற்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.