பிக்பாஸ் தொகுப்பாளர் 2: ஆளவிடுங்க சாமி: சூர்யா

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (22:30 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நன்மைகள் இருவருக்கு நடந்துள்ளது. ஒன்று கமலுக்கு அரசியல் வாய்ப்பு மற்றும் 'இந்தியன் 2' பட வாய்ப்பு. மற்றொன்று பொதுமக்களில் பெரும்பாலானோர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்த ஆரவ்வுக்கு சாம்பியன் பட்டம்



 
 
இந்த நிலையில் மிக விரைவில் பிக்பாஸ் 2 ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.
 
சூர்யா தற்போது பிசியாக தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்போதைக்கு அவரது கவனம் முழுவதும் திரைப்படத்துறையில் தான் உள்ளது. எனவே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை' என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்