பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷலாகத் திரையிடப்படும் சூர்யா படம்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (12:11 IST)
சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம், பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கார்த்திக், செந்தில், ரோபோ சங்கர், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்திய சினிமாவிலேயே இதுவரைக்கும் யாரும் செய்யாத விஷயமாக, பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட இருக்கிறது. அதுவும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் அதற்கான டிக்கெட் விற்பனை இப்போதே தொடங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்