முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (11:53 IST)
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பிற்காக முதன்முறையாக டப்பிங் பேசியுள்ளார் சூர்யா.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன்,  சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன்  ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழைப் போலவே தெலுங்கிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால், தமிழில் வெளியாகும் அதே தினத்தன்று தெலுங்கிலும் ரிலீஸாகிறது. அங்கு, ‘கேங்’ என்ற பெயரில் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. தெலுங்கில், யுவி க்ரியேஷன்ஸ்  என்ற நிறுவனம் வெளியிடுகிறது. இதுவரை தெலுங்கில் டப்பிங் பேசாத சூர்யா, முதன்முறையாக இந்தப் படத்தில்  பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்