’விக்ரம்’ படத்தில் சூர்யா: உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (08:10 IST)
கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது
 
இந்த படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து உள்ளதை உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி நேற்று வெளியான டிரைலரில் சூர்யா ஒரே ஒரு காட்சியில் இருப்பதும் தெரிய வந்தது.
 
சூர்யா இந்த படத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
 
ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யா ஒரு சிறு கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்றைய ட்ரெய்லர் விழாவில் அந்த செய்தி உறுதி செய்யப்பட்டதால் சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்