எதற்கும் துணிந்தவன் படத்தின் டல்லடிக்கும் டிக்கெட் புக்கிங்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:44 IST)
சூர்யா நடிப்பில் உருவாகி நாளை வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.

ஜெய்பீம் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாக உள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது டிக்கெட் புக்கிங் மூன்று நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் டிக்கெட் புக் ஆகாமல் உள்ளதாம். சூர்யா படத்துக்கு டிக்கெட் புக் ஆகாமல் இருப்பது திரையுலகினருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை நாளை வியாழக்கிழமை வேலை நாள் என்பதால் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லையோ என்று தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்