வணங்கான் படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்… சிம்பு பட இயக்குனர் புகார்!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (16:19 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீபாவளியின் போது இந்த திரைப்படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புக்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சரவணன் ஆரவ் நடிப்பில் வணங்கான் என்ற பெயரை பதிவு செய்து ஷூட்டிங் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இது சம்மந்தமாக இப்போது அவர் புகார் தெரிவித்து அது சம்மந்தமாக பஞ்சாயத்து நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்