முதன்முறையாக வெளியான இயக்குநர் ஷங்கர் மகனின் புகைப்படம்

திங்கள், 30 அக்டோபர் 2017 (13:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வரிசையில் இருப்பவர் ஷங்கர். அந்த அளவிற்கு தன் படங்களில் தொடர்ந்து  பிரமாண்டத்தை புகுத்தி வருபவர். தற்போது 2. ஓ படத்தை பிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இப்படத்தின் ப்ரமோஷனுக்காக அதிக அளவில் செலவு செய்துள்ளார்.


 
இந்நிலையில் ஆடியோ விழாவின் சிறப்பு அம்சமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
 
இந்நிலையில் இவர் இயக்கத்தில் 2.0 இசை வெளியீட்டு விழா துபாயில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். மேலும், ரகுமானின் மகன், தனுஷின் மகன்கள் என எல்லோரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை இயக்குநர் ஷங்கரின் மகன் புகைப்படத்தினை மீடியாவில் வெளியானதில்லை. முதன் முறையாக  ஷங்கரின் மகனும் இந்த விழாவில் கலந்துக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்