சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மாடல் அழகி

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (11:09 IST)
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில், மாடல் அழகியான மீரா மிதுன் நடிக்கிறார்.

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்த லிஸ்ட்டில், சென்னையைச் சேர்ந்த மாடல் அழகியான மீரா மிதுனும் இடம்பிடித்துள்ளார். ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம்  வென்ற இவர், ‘8 தோட்டாக்கள்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, இந்தப் படத்திலும் நடிக்கிறார். இந்தப்  படம், பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்