என்னடா வார்த்தையே புரியல… இணையத்தில் ட்ரோல் ஆகும் கருப்பு முதல் சிங்கிள் பாடல்!

vinoth

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (09:56 IST)
கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. இன்னும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் படக்குழ் மேல் அதிருப்தியில் அவ்வபோது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடலான ‘God mode’ பாடல் வெளியானது.

சூர்யா வேட்டி சட்டையுடன் கையில் அரிவாளுடன் பெரிய திடலில் கடவுளுக்கு முன்னால் ஆக்ரோஷமாக ஆடுவது போன்று பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் ரிலீசாகி கவனம் பெற்றுள்ள நிலையில் பாடலில் வரிகள் சுத்தமாகப் புரியவில்லை என்று ரசிகர்கள் சாய் அப்யங்கரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த பாட்டை சாய் அப்யங்கரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்