சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

vinoth

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (15:15 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மேலேறி வந்துகொண்டிருந்த விஜய் தேவரகொண்டா சமீபகாலமாக தொடர்ச்சியாக தோல்வி படங்களாகக் கொடுத்து வருகிறார்.  இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான ‘கிங்டம்’ திரைப்படம் ஆகஸ்ட்ர் 1 ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

கடந்த ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் எதுவும் கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் அவர் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது ரவி கிரண் கோலா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் ‘மனம். ‘13B’ மற்றும் சூர்யாவின் ‘24’ உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்