அஜித்துக்கு நடந்தது ஆப்ரேஷன் இல்லை… மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!

vinoth
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (07:33 IST)
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே மெ மாதம் தொடங்கி ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கும், குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கும் ஐதராபாத்தில் அருகருகே நடக்கிறது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வெளியிட்டுள்ள தகவலின் படி  அஜித், இரண்டு படங்களின் ஷூட்டிங்கிலும் மாறி மாறி நடித்து கொண்டிருக்கிறாராம். பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டது ஆப்ரேஷன் இல்லை என்றும் அது ஒரு புரொஸிஜர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆஞ்சியோகிராம் மாதிரி அது ஒரு மைனர் புரொஸீஜர் என விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்