சூப்பர் ஸ்டாரின் பேத்தி சினிமாவில் அறிமுகம்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (21:07 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பராகவும் இருந்த ராஜ்குமாரின் பேத்தி சினிமாவில் அறிமுகமான உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவர் வீரப்பனால் கடத்தப்பட்டு அவரிடமிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு தப்பி வந்தார். அப்போது, அவரை மீட்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.

இந்நிலையில்,கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி தன்யா தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது  இப்படம் குறித்த அறிவிப்பு விரையில் வெளியாகவுள்ளது. இவரது தந்தை ராம்குமார் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராவார்.

தன்யா ராம்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மடியில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்