நடிகர் விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ! எகிறும் எதிர்பார்ப்பு

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (19:27 IST)
நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கி வரும் புதிய படம் விஜய்66. இப்படம் நேரடி தெலுங்கு தமிழில் உருவாகி வருகிறது.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தில்  ஏற்கனவே, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷியாம், சரத்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க மகேஷ் பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும், வம்சியின் உடனான நட்பு காரணமாக மகேஷ் பாபு இந்த சிறப்பு தோற்றத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இப்படம் இந்திய முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்