சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.
அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் " நான் குடிக்கும் முதல் பீர் என வெளிப்படையாக குறிப்பிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார்.