இந்தியில் டப் செய்யப்படும் விஜய்சேதுபதியின் சூப்பர்ஹிட் படம்

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (19:53 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ஒன்று ஹிந்தியில் டப் செய்யப்பட உள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படம் தமிழில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் டப் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஏற்கனவே சமந்தாவின் ஒரு சில திரைப்படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் படம் டப் செய்யப்படுவது அவருக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த திரைப்படம் தெலுங்கில் டப் செய்ய சமந்தா எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. சமந்தாவுக்கு தெலுங்கு திரையுலகில் நல்ல இமேஜ் இருப்பதாகவும் இந்த படத்தில் சமந்தா நடித்த கேரக்டர் அவரது இமேஜுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தெலுங்கில் டப் செய்ய வேண்டாம் என சமந்தா கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்