சன்னி லியோனுக்கு வந்த சோதனை: வெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது!

வெள்ளி, 15 டிசம்பர் 2017 (13:03 IST)
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்க உள்ள நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு பெங்களூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில கன்னட அமைப்பினர் போராட்டங்கள் அறிவித்துள்ளனர். இது சன்னி லியோன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
புது வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு, சன்னி நைட் இன் பெங்களூர் என்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடனம் ஆடி தனது ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளார் என கூறப்படுகிறது.
 
சன்னி லியோன் இதற்கு முன்னர் பெங்களூர் வந்திருக்கிறார், கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் கவர்ச்சியாக வந்திருக்கிறார். ஆனால் தற்போது நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
சன்னி லியோன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என கர்நாடக ரக்ஷன வேதிக யுவ சேனை என்ற அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. 15 மாவட்டங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.
 
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹரீஷ் மற்றும் பொதுச்செயலாளர் சையது மினாஜ் கூறியபோது, சன்னியலியோன் கர்நாடகாவையோ, இந்தியாவையோ சேர்ந்தவர் அல்ல. அவர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவரால் கலாச்சாரம் கெடுவதை அனுமதிக்க முடியாது.
 
மேலும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பயோடெக் நிறுவனங்களுக்குத்தான் விற்கப்படுகிறது. மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால் இது ஏற்க கூடியதாக இல்லை எனவே எங்கள் போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்