மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது பைசன் திரைப்படம். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் இன்பன் உதயநிதி நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். அதில் “இன்பன் உதயநிதி அறிமுகமாகும் படத்தை நான் இயக்கவில்லை. அவர் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் தரப்பில் வேண்டுகோள் வைத்தால் அவரை வைத்துப் படம் இயக்குவேன்” எனக் கூறியுள்ளார்.