இதற்கிடையில் நடிகர் கார்த்தி, சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இருவரும் இது சம்மந்தமாக சந்தித்துப் பேசியுள்ளதாகவும் இந்த படத்தை கார்த்தியின் நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமணன் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துள்ளது. டிசம்பர் மாதம் இந்த படத்தைத் தொடங்க உள்ளதாகவும் குறுகிய கால படமாக உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சுந்தர் சி முன்பணம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.