விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசனில் முதல்முறையாக வீட்டு தல, பிக்பாஸாலேயே பதவி பறிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் தொடங்கி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போதுதான் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல் வாரம் ஒருவாராக போனாலும் கூட இரண்டாவது வாரத்தில் வீட்டிற்கான வீட்டு தல நியமிக்கப்பட்டார். இதற்கான போட்டியில் வாயை மூடிக்கொண்டே வேலை செய்வேன் என சொல்லி வீட்டு தல ஆன துஷார், சொன்னதுபோலவே வீட்டு பராமரிப்பு வேலைகளில் வாயை திறக்கவே இல்லை. ஆனால் வேலையும் வாங்கவில்லை.
இதற்கிடையே அரோராவுடன் நெருக்கம் அதிகமாக வீட்டை மறந்து, வீட்டு தல பதவியை மறந்து அரோரா கூடவே சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தார் துஷார். ஹவுஸ்மேட்ஸ் இடையே சண்டை வந்தபோதும் கூட அதை தீர்த்து வைக்க அவர் முயலவில்லை.
இந்நிலையில் ஆடியன்ஸுக்கே துஷார் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில் இன்று துஷாரின் வீட்டு தல பதவியை பறித்துள்ளார் பிக்பாஸ். வீட்டை சரியாக பராமரிக்கவில்லை என அனைவரையும் கண்டித்த பிக்பாஸ், இந்த வீட்டிற்கு நீங்கள் எதற்காக வீட்டு தலயாக இருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை என சொல்லி பதவியை பறித்தார். பிக்பாஸே பதவியை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K