ஷேக்ஸ்பியரிடமிருந்துதான் ‘ரெட்ட தல’ படத்தின் கதையை எடுத்தேன் – இயக்குனர் பகிர்வு!

vinoth

வியாழன், 16 அக்டோபர் 2025 (08:01 IST)
அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.  

படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இயக்குனர் கிரிஷ் படத்தின் கதைக்களம் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் “இந்த படத்தின் கதையை நான் ஷேக்ஸ்பியரிடமிருந்துதான் எடுத்துள்ளேன். ஒருவன் தப்பு செய்யும் போது நம்மை யார் பார்க்கிறார்கள் என நினைக்கக் கூடாது. நம்மை யாரோ ஒருவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது கடவுளாகவோ காற்றாகவோ இருக்கலாம். இந்த படத்தில் கதாநாயகன் தான் காதலித்தப் பெண்ணுக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறான். ஆனால் அந்த பெண் அதற்குத் தகுதியானவளா என்று யோசிக்கும்போது நடக்கும் மாற்றம்தான் கதை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்