தீபாவளி விருந்து… சன் டிவியில் நேரடியாக வெளியாகும் சுந்தர் சி படம்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (13:47 IST)
சுந்தர் சி தயாரிக்கும் மாயா பஜார் என்ற திரைப்படம் சன் டிவியில் நேரடியாக வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சுந்தர் சி. அதற்கு மிக முக்கியக் காரணம் அவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டியாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல் தனது பெரும்பாலான படங்கள் ஏதாவது வேறு மொழி படங்களின் ரீமேக் அல்லது தழுவலாக இருக்கும். அதனால் குறைந்த பட்ச வெற்றி அவர் படத்தில் உறுதியாகி விடுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாயாபஜார் எனும் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ஆனால் அந்த படத்தை அவர் ரீமேக் செய்யாமல் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தை அவரது உதவியாளர் பத்ரி இயக்கி வருகிறார். பிரச்சன்னா மற்றும் ரைசா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்நிலையில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து தீபாவளி அன்று சன் டிவியில் இதை ரிலீஸ் செய்ய உள்ளாராம் சுந்தர் சி. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்