சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் சூர்யாவின் தலையீட்டால் கைவிடப்பட்டது. அந்த கதை இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றிய படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா நேரடி இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான போட்டோஷூட் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த போட்டோஷூட் கைவிடப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு வாரம் முன்னதாகவே டிசம்பர் 14 ஆம் தேதி (நாளை) முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் க்ளீன் ஷேவ் லுக்குக்கு மாறியுள்ளாராம்.