வாடிவாசலுக்கு முன் இன்னொரு படம்… மலையாள இயக்குனரோடு கைகோர்க்கும் சூர்யா!

vinoth

வியாழன், 12 டிசம்பர் 2024 (11:32 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதனால் அவர் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய இக்கட்டில் இருக்கிறார்.

ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வாடிவாசல் தொடங்கினால் இரண்டு ஆண்டுகளுக்கு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதால் அதற்கு முன் இன்னொரு படம் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

இதற்காக அவர் மலையாள இயக்குனர் அமல் நீரஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இந்த படம் ஒரு குறுகிய கால படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அமல் நீரஜ் சமீபத்தில் ரிலீஸான போகன் வில்லா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்