ஸ்டண்ட் கலைஞரை வியக்க வைத்த அஜித்!!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (11:06 IST)
அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தல 57 படத்தில் நடித்து வருகிறார்.

 
இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசனும் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் அஜித்தின் சண்டை காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். ஜோரியன் பொனமரெப் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்தததைப் பார்த்து வியந்துபோன அவர், அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.


 
அடுத்த கட்டுரையில்