கொலைகாரியாக மாறிய வேம்பு சமந்தா - சூப்பர் டீலக்ஸ் டீஸர்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (13:13 IST)
விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலன்ஸ் படத்தின் மிரட்டலான டீஸர் வெளியாகியுள்ளது.

 
தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
இந்நிலையில் இப்படத்தில் மிரட்டலான டீஸர் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். கையில் கத்தியுடன் ஒருவர் கழுத்தில் வெட்ட ஒத்திகை பார்க்கும் காட்சி இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.
 
இந்த படத்தின் சிறப்பம்சம் விஜய் சேதுபதி முதன்முதலாக திருநங்கையாக நடிக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்