உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (12:20 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.



பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. இந்தப் படத்தில் ஹீரோயினாக நமீதா பிரமோத் நடிக்கிறார். மேலும், பார்வதி நாயர், மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் இது.
தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத் இருவரும் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சந்தோஷ் குருவில்லா தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

வருகிற 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’, அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ ஆகிய படங்களும் 26ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்