மெர்சல் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; சரண்டர் ஆன விஜய் தரப்பு

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (14:20 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது 'மெர்சல்' திரைப்படம். ரசிகர்களின்  கொண்டாட்டத்தால் 'மெர்சல்' படம் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. 'மெர்சல்' படத்தில் மத்திய, மாநில அரசுகளை  விளாசியிருக்கிறார் விஜய்.

 
இந்தப் படத்தில் மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் வசனங்களை நீக்க வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி பற்றிய உண்மையை அறியாமல் தனது அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடம்  பொய்யான கருத்துகளை 'மெர்சல்' படத்தின் மூலம் நடிகர் விஜய் பரப்பி வருவதாக பா.ஜ.க-வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். 
 
ஜி.எஸ்.டி குறித்த வசனங்களைப் படத்திலிருந்து நீக்காவிட்டால் திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வந்துள்ள தகவலில் மெர்சல் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பினால் விஜய் தரப்பு  சரண்டர் ஆனதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்