இதனை அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டது என்பது என்பதையும் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். கமல் வீட்டில் வீட்டில் தங்கியிருந்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர் என்பதால் அவரது வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், ஆனால் அந்த நபர் தற்போது அந்த வீட்டில் இல்லை என்பதால் ஸ்டிக்கர் நீக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது
ஆனால் அந்த நபர் யார் என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறவில்லை. இந்த நிலையில் நடிகை கவுதமி வீட்டில் ஒட்டவேண்டிய தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் தான் கமல் வீட்டில் தவறுதலாக ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கமல் வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் கௌதமி தங்கியிருந்தார் எனவும் அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை மாற்றப்படாமல் இருந்ததால் அந்த முகவரியை வைத்து கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஓட்டியதாக கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது