இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் கொரோனா போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ”கமல்ஹாசனிடம் பணி புரியும் ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்ததால் அவரது வீட்டில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் வசிப்பதில்லை என்பது தெரியாததால் அங்கு ஒட்டப்பட்டுள்ளது. பிறகு நீக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற சிறிய தவறுகள் மீண்டும் நடக்காமல் கவனமாக கையாளப்படும்” என தெரிவித்துள்ளார்.