“அனிருத் கிட்ட சொல்லி இருக்கேன்”… தளபதி 66 ஆல்பம் பற்றி தமன் சொன்ன தகவல்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (08:00 IST)
தளபதி 66 படத்தின் இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. த்தின் பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் இயக்குனர் வம்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒருகட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இசையமைப்பாளர் தமன் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் படத்தின் பாடல்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் நீண்ட காலமாக இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். ஒரு ரசிகனாக இந்த படத்தின் ஆல்பத்தை என்னுடைய பெஸ்ட்டாக கொடுப்பேன். அனிருத்திடம் கூட இதை சொல்லி இருக்கிறேன். ‘நீ உன்னோட பெஸ்ட்ட கொடுத்த மாதிரி நானும்  கொடுப்பேன்’ என்று” என விஜய் ரசிகர்களைக் குஷியாக்கும் விதமாக சொல்லியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்