இளம் நாயகனுக்கு ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா: 3 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (07:48 IST)
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா, கடைசியாக 2017 ஆம் ஆண்டு அட்லி தயாரிப்பில் உருவான ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார்
 
அதன் பின்னர் மூன்று வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது அவர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
இந்த படத்தில் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோ கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிசியோதெரபி மருத்துவராக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளதாகவும் அவரது கேரக்டரை சுற்றித்தான் கதை பின்னப்பட்டு இருப்பதாகவும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியுள்ளார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கெளதம் கார்த்திக் ஸ்ரீதிவ்யா முதல் முறையாக இணையும் இந்த படத்தில் பாலசரவணன் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வில்லனாக பிரபல நடிகர் ஒருவரிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்