போதையை கையில் எடுத்து... மீண்டும் காண்ட்ரவெர்சி ப்ரேமுக்குள் வரும் ஸ்ரீரெட்டி!!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:39 IST)
போதைப்பொருள் விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பேசி மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். 
 
கடந்த சில வாரங்களாக திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கன்னட நடிகைகள் சிலர் கைது செய்யப்பட்டது மேலும் பரபரப்பை கூட்டியது. இந்நிலையில் டோலிவுட்டிலும் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை தெரிவிக்க தயார் என்றும்  ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்றி வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்