சின்மயி ஒரு துர்கா மாதா - பாராட்டிய ஸ்ரீரெட்டி

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (17:38 IST)
பல்வேறு பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வரும் பாடகி சின்மயியை நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டியுள்ளார்.

 
கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “ நவராத்திரி தொடங்கி விட்டது. சின்மயி கூட ஒரு துர்கா மாதாதான். அவரின் தைரியத்தை பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்