‘ரெட்டியின் டைரி’ -உண்மை வீடியோ காட்சிகள் இருக்குமா? பகீர் தகவல்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (10:40 IST)
தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்  நடிகை ஸ்ரீரெட்டி. இவர்  தனது வாழ்க்கை வரலாற்றை  ‘ரெட்டியின் டைரி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் படமாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே நடிக்கிறார். அலாவுதீன் இயக்குகிறார். ரவிதேவன், சித்திரைச்செல்வன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

 
இந்த படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரீரெட்டி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது;-
 
சினிமா இன்டர்ரியில சான்ஸ் கேட்டு போற நடிகைகள, பெட்ரூமுக்கு  வரச்சொல்லி செக்ஸ்சுவல் டார்ச்சர் பண்றாங்க. எனக்கு அந்தமாதிரியான  அனுபவம் நடந்தது. அதனாலதான் நான் தைரியமாக அம்பலப்படுத்தினேன். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை மையப்படுத்தி ‘ரெட்டியின் டைரி’ படம் தயாராகுது.
 
இதில் நான் முக்கியமான ரோல்ல நடிக்கிறேன். நல்லவர்களாக நடித்து சினிமாவில் மோசடி பேர்வழிகளாக வலம்வருபவர்களை படத்தில் அம்பலப்படுத்துவேன்.
 
எனக்கு ஆந்திராவில்  பாதுகாப்பு இல்லை. சிரஞ்சீவி, பவன்கல்யாண், சுரேஷ்பாபு உள்பட 4 குடும்பத்தினர் ஆதிக்கத்தில் தெலுங்கு பட உலகம் இருக்கிறது. எனக்கு நடிக்க தடைபோட்டார்கள். நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் தரவில்லை. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பிறகு தடையை நீக்கினார்கள்.
 
ஆனாலும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. அரசும் உதவவில்லை. எனவே ஆந்திராவைவிட்டு வெளியேறி சென்னையில் குடியேறிவிட்டேன். இங்குள்ளவர்கள் பெண்களை மதிப்பவர்கள். எனக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது சென்னையில் இருப்பவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
 
நான் பாலியல் புகார் சொன்ன லாரன்ஸ் வாய்ப்பு அளித்தாலும் நடிப்பேன். ‘ரெட்டியின் டைரி’ படத்தில் எனது வாழ்க்கை சம்பந்தமான காட்சிகள் இருக்குமா?, உண்மை வீடியோ காட்சிகள் இருக்குமா? என்பதை எல்லாம் இப்போது சொல்லமுடியாது.
 
மறைந்த முதல்வர்  ஜெயலலிதா எனக்கு ரோல்மாடல். அவருரடைய தைரியம் எனக்கு பிடிக்கும். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. எனது வாழ்க்கையை சுயசரிதையாகவும் எழுதுவேன். சினிமாவில் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பட்டியலை தொடர்ந்து வெளியிடுவேன் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்