ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர் விஜய், அஜித், சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்ரீ ரெட்டி. ஒரு காலத்தில் அழகு நிலையத்தை நடத்தி வந்தவர். நண்பரின் உதவியால் திரையுலகில் நுழைந்த இவர், முதலில் தனது 3 ஆண்டுகளை செய்தி வாசிப்பாளராகவே கழித்துள்ளார்.
தெலுங்கில் சில படங்களில் மட்டும் நடித்துள்ள இவர், தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் மீது பாலியல் புகார் கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறார்.
திரையுலகில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை தவறாக உபயோகித்துக்கொண்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீ காந்த், ராகவா லாரான்ஸ் உள்ளிட்டோர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் தனக்கு பிடித்த நடிகர் அஜித், தளபதி அழகான நடிகர், நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மிக நல்லவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.