இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தின் ஐந்து நிமிட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்படைர் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ஐந்தரை நிமிட காட்சியை யாரோ இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழு, இது தொடர்பாக உடனடியாக கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இணையத்திலிருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.