சிவகார்த்திகேயன் என்னை காமெடி வேடத்தில் நடிக்கக் கூப்பிட மாட்டார்- சூரி ஓபன் டாக்!

vinoth

வியாழன், 22 மே 2025 (10:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் ‘சிம்புவுக்காக சந்தானம் காமெடி வேடத்தில் மீண்டும் நடிக்கிறார். அது போல சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் மீண்டும் காமெடி வேடத்தில் நடிப்பீர்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சூரி “நானே அதற்கு சம்மதம் சொன்னாலும், சிவா தம்பி அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார். அவர் என்னிடம் “அண்ணே இனிமே நாம சேர்ந்து நடிப்பதாக இருந்தால், இருவருக்கும் சமமான முக்கியத்துவம் உள்ள கதையில்தான் நடிக்கனும்” என்று சொல்லியுளார். அப்படி ஒரு கதையமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இணைந்து நடிப்போம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்