ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதா சூரியின் ‘மாமன்’ திரைப்படம்… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

vinoth

சனி, 17 மே 2025 (10:55 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்க, நேற்று இந்த படம் ரிலீஸானது.

அக்கா, தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட ‘பாசமலர்’ டைப் கதையாக உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 1.75 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்