சிம்புவுக்காக எழுதிய வட சென்னை… இப்போ அதையே வேற மாதிரி எடுக்கப் போறேன் – வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

vinoth

செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (16:00 IST)
வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த படமும் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. ஏனென்றால் சிம்பு கேட்கும் சம்பளத்தால் தாணு அந்த படத்தினைத் தயாரிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படமும் கைவிடப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் 10 நாட்களில் இது சம்மந்தமான அப்டேட்டைக் கொடுப்பேன் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் பற்றி மேலும் பேசியுள்ள அவர் “சிம்புவை வைத்துதான் ‘வடசென்னை’ படத்தை எடுப்பதாக இருந்தது. ஆனால் அதில் தனுஷ் நடித்தார். அது சுருக்கப்பட்ட வடிவம். இப்போது வட சென்னைக் கதையையே வேறு மாதிரி எடுக்கப் போகிறேன். வடசென்னை உலகத்தில் இருந்த பாத்திரங்கள் இதிலும் வருவார்கள். தனுஷ் பாத்திரம் மட்டும் இருக்காது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்