இணையத்தில் பரவிய சாய் பல்லவியின் நீச்சல் உடை புகைப்படங்கள்.. சகோதரி பூஜா கொடுத்த விளக்கம்!

vinoth

வியாழன், 2 அக்டோபர் 2025 (08:01 IST)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதே போல கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

தற்போது இந்தியில் உருவாகும் ‘ராமாயண்’ படத்தில் சீதா வேடத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் அவரும் அவரது சகோதரி பூஜாவும் கடற்கரையில் நீச்சல் உடையில் இருப்பது போன்ற கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால் அந்த படங்கள் AI பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை போல காணப்பட்டாலும் அவைத் தொடர்ந்து பரப்பப்பட்டன. இந்நிலையில் பூஜா தற்போது தாங்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று மகிழ்ந்திருந்த தருணங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு “இந்த புகைப்படங்கள் உண்மை. அவை AI யால் உருவாக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அவர்கள் நீச்சல் உடையில் இருந்த புகைப்படங்கள் உண்மையில்லை என்பதை நக்கலாக பதிவு செய்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்