25 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரியின் ‘மாமன்’ திரைப்படம்!

vinoth

செவ்வாய், 27 மே 2025 (07:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்க, மே 16 ஆம் தேதி இந்த படம் ரிலீஸானது.

படம் குடும்ப செண்ட்டிமெண்ட்டாக (பல கிரிஞ்ச் காட்சிகளோடு) இருந்ததால், ரசிகர்களின் ஆதரவு இந்த படத்துக்குக் கிடைத்தது. இதனால் சீரான வசூலைப் பெற்று வந்த இந்த திரைப்படம் தற்போது 10 நாட்களில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தைக் கொடுக்கும் படமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்