ஆறாவது முறையாக அஜித் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய நிறுவனம்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (13:08 IST)
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஆடியோ உரிமையை, சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.


 

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.

அனிருத், ‘வேதாளம்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சோனி நிறுவனம், இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. இதோடு, ஆறாவது முறையாக அஜித் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது சோனி நிறுவனம்.
 
அடுத்த கட்டுரையில்