பங்களாதேஷ் வீரர் ஷகீப் அல் ஹசனுக்கு பந்துவீசத் தடை.. காரணம் என்ன?

vinoth

திங்கள், 16 டிசம்பர் 2024 (14:59 IST)
வங்கதேசத்தை சேர்ந்த ஆல் ரவுனடரான ஷகிப் அல் ஹசன் அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அணிக்காக ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

சமீபத்தில் அவர் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து உள்நாட்டு தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில்  அந்த தொடரில் அவர் விதிமுறைகளை மீறி பந்துவீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் மீதான குற்றம் உண்மைதான் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு தொடரிலும் பந்துவீச முடியாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்