மீண்டும் காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங்… ஆனா சிவகார்த்திகேயன் ஆப்செண்ட்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (13:26 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. மாவீரன் ஷூட்டிங் முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் காஷ்மீரில் தொடங்கியது.

காஷ்மீரில் படக்குழு சில நாட்களாக முகாமிட்டு ஷூட்டிங்கை நடத்திய நிலையில் இப்போது பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளதாம். இதனால் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டார்.

சமீபத்தில் மாவீரன் பட டப்பிங்கையும் முடித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் காஷ்மீரில் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் அதில் கலந்துகொள்ளவில்லை.  இன்னும் சில நாட்கள் கழித்தே அவர் காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்