மீண்டும் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா: இயக்குனர் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (14:34 IST)
அஜித் நடித்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் எஸ்ஜே சூர்யா. அதன்பின் அவர் பல வெற்றி படங்களை இயக்கினார் என்பதும் அதன் பின்னர் ஹீரோவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சமீபத்தில் அவர் விஜய் உள்பட பல முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் இடையிடையே ’மான்ஸ்டர்’ ’நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற ஹீரோவாக அவர் நடித்த திரைப்படங்களும் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இந்த படம் ஒரு வெப்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கொலைகாரன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இந்த வெப்தொடரை இயக்க உள்ளார் என்பதும் இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு இம்மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேஉம் இந்த தொடரில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்