ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்ற தனுஷ் பட வேலைகள் முடிந்து மீண்டும் தமிழகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் விரைவில் தனுஷ் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகம் திரும்பியவுடன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் டி-43 படத்தின் மீத படப்பிடிப்புகளை முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.