ரெமோவை விட பெரிய வெற்றி கிடைக்கட்டும்… சுல்தான் இயக்குனரை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:42 IST)
இயக்குனர் பாக்ய்ராஜ் கண்ணன் இயக்கியுள்ள சுல்தான் திரைப்படம் வெற்றி பெற நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் இன்று காலை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் முதல் படமான ரெமோவின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் ‘ இந்த படம் ரெமோவை விட மிகப்பெரிய வெற்றியை உங்களுக்குத் தரட்டும். நடிகர் கார்த்திக்கும், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கும் வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்